சட்டப்பேரவையில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ள தி.மு.க!

சட்டப்பேரவையில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ள தி.மு.க!

பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டம், வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டம், வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப தி.மு.க திட்டமிட்டுள்ளது.

ttn

தமிழக நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் கடந்த 14ம் தேதி தாக்கல் செய்தார். தமிழக அரசின் கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கவலை தரக்கூடிய விஷயங்கள் இதில் இடம் பெற்றிருந்தது. வழக்கம் போல தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆஹா, ஓஹோ என்று புகழ்வதும் நடந்துமுடிந்துவிட்டது.

ttn

பட்ஜெட் தொடர்பான விவாதம் இன்று சட்டப்பேரவையில் தொடங்குகிறது. காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்மானம், சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள், தமிழக அரசின் கடன் அதிகரிப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
வழக்கம் போல தி.மு.க பற்றி எதிர்க் கருத்துக்களைக் கூறி அவர்களை வெளியேற்ற அ.தி.மு.க-வும் தயாராக உள்ளது. இன்றும், நாளையும் விவாதம் நடைபெறும். 20ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசுவார்.