சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு !

 

சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு !

2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கச் சட்டப்பேரவை கூட்டத்தொடர்  இன்று கூடியது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கச் சட்டப்பேரவை கூட்டத்தொடர்  இன்று கூடியது. அதில்  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சட்டப்பேரவையின் விதிகளின் படி சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று மு.க ஸ்டாலினிடம் சபாநாயகர் தனபால் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்தார். 

ttn

அதனைத்தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது. பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , உரிய அனுமதி இல்லாமல் வண்ணார பேட்டையில் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் அதனைத் தடுக்க சென்ற காவலர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாகவும் கூறினார். மேலும், காவலர் அடித்ததால் ஒருவர் உயிரிழக்க வில்லை என்றும் இயற்கையாக ஒருவர் உயிரிழந்தது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் தான் போராட்டம் நடைபெற்றது என்றும் ஒரு சில சக்திகளின் தூண்டுதல் காரணமாகத் தான் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

ttn

இதனை ஏற்க மறுத்த திமுகவினர், முதல்வரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி மு.க ஸ்டாலின் மற்றும் அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதே போல, காங்கிரஸ் கட்சியினரும் வெளியேறினர்.