சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல: சட்டத்துறை அமைச்சர் சர்ச்சை பேச்சு!

 

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல: சட்டத்துறை அமைச்சர் சர்ச்சை பேச்சு!

 சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியில் தவறானது

கர்நாடகா: சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

laxman

கர்நாடக சட்டப்பேரவையில் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி,  தற்போது துணை முதல்வராக உள்ள லட்சுமண் சவடி, தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளம்பியதால் அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த அவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது லட்சுமண் சவடி  அமைச்சரவையில் இடம் அளித்திருப்பதை அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கடுமையாக விமர்சித்திருந்தார்.

madhusamy

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ர்நாடக சட்டத்துறை அமைச்சர் மதுசாமி,  சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியில் தவறானதுதான். அதை அவர் எதிர்பாராத விதமாகப் பார்த்து விட்டார், அதற்காக அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. நாம் அனைவரும் தவறு செய்பவர்கள் தான். அவர் யாரையும் ஏமாற்றவில்லை, தேச விரோத செயல்களில் ஈடுபடவில்லை. அதற்காக அவர் ஆபாசப் படம் பார்ப்பது சரி என்று கூறவில்லை. இது தேவையற்ற விவாதம்’ என்றார். கர்நாடக சட்டத்துறை அமைச்சரின் இந்த விளக்கமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.