சட்டப்பேரவையில் அறிவியல் பூர்வமாக பேசி அசத்திய ஓபிஎஸ்! 

 

சட்டப்பேரவையில் அறிவியல் பூர்வமாக பேசி அசத்திய ஓபிஎஸ்! 

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நடுவே அரளிச் செடிகள் நடப்பட்டுள்ளது ஏன் என்பதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நடுவே அரளிச் செடிகள் நடப்பட்டுள்ளது ஏன் என்பதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சனி. ஞாயிறு விடுமுறைக்குப் பின் பேரவை மீண்டும் இன்று கூடியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

அதிமுகவில் நிறைய அறிவியல் விஞ்ஞானிகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே… நான் விலாங்கு மீன் அல்ல டால்பின் எனக்கூறும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடும் வெயிலால் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் மிதக்க விடுவது போன்ற வேறு அறிவியல் திட்டங்கள் உண்டா? எனக் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கஜா புயல் பாதித்த பகுதிகளில் கரண்ட் கம்பங்களை விமானம் மூலம் நடுங்கள்  என வெள்ளந்தியாகப்  பேசும் திண்டுக்கல் சீனிவாசன் போன்ற அமைச்சர்களுக்கிடையே ஒரு மூளைக்கார துணை முதலமைச்சரும் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 

தேசிய நெடுஞ்சாலை நடுவே அரளி பூச்செடி வளர்ப்பதால் எந்த பயனும் இல்லை என சங்கராபுரம் தொகுதியின் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசினார்.அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், சாலையின் நடுவே அரளி பூச்செடிகள் வளர்ப்பதன் மூலம், சாலைத் தடுப்புக்கு மறுசாலையில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சமானது, எதிர்திசையில் செல்லும் வாகன ஓட்டிகளை பாதிக்காத வண்ணம் தடுக்கப்படும் இதற்காகதான் அரளிச்செட்டி வளர்க்கப்படுகிறது. 

இதுமட்டுமல்லாமல் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை அரளி பூச்செடி எடுத்துக் கொண்டு அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும்,அதனால் சுற்று சூழல் மாசுபடுவது குறையும்  என்பதால் தான் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் கொடுத்து அனைவரையும் அசரவைத்தார்.