சட்டப்படி செல்லாது… கள்ளக்காதலுக்கு புது விளக்கமளித்த இளம்பெண்! குழம்பி தவிக்கும் போலீசார்!

 

சட்டப்படி செல்லாது… கள்ளக்காதலுக்கு புது விளக்கமளித்த இளம்பெண்! குழம்பி தவிக்கும் போலீசார்!

தமிழகத்தில் பாரம்பரியமும், பண்பாடும் புகழ்பெற்றது. இன்றளவிலும் தமிழக மக்கள் தங்களது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கட்டிக் காத்து வருகிறார்கள் என்று வளர்ந்த நாடுகளில் இருந்தெல்லாம் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், கணவனையும், குழந்தைகளையும் பிரிந்துச் சென்று தனது காதலனைக் கரம் பிடித்த பெண், சட்டப்படி முதல் திருமணமே செல்லாது என்று போலீசாரை அதிர வைத்துள்ளார்.

ramesh

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி. தாயாரின் வற்புறுத்தல் காரணமாக 15 வயதான போது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற சமையல் தொழிலாளியைக் கல்யாணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளன. இவர்களது திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், துபாய்க்கு வேலைக்குச் சென்றிருக்கிறார் ரமேஷ். கணவர் துபாய்க்கு சென்றிருந்த நிலையில், தனது காதலனை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் ப்ரீத்தி. இது பற்றி, தனது மனைவி முதல் திருமணத்தை மறைத்து அகிலை பாதிரியார் முன்னிலையில் 2 வது திருமணம் செய்துள்ளதாக போலீசில் புகாரளித்தார். 

preeti

போலீசாரின் விசாரணையில், குழந்தைகள் தனக்கும், ரமேஷுக்கும் பிறந்தவை என்றும் ஆனால் சட்டத்தின் ஆவணங்களின் படி ரமேஷ் தனது தாயைத் தான் திருமணம் செய்துள்ளார் என்றும் சொல்லி போலீசாருக்கு அதிர்ச்சியளித்தார். 15 வயது இருக்கும் போது திருமணம் செய்வதற்காக திருமண பதிவு சான்றிதழில் மணப்பெண்ணின் வயது சான்றுக்கு பதிலாக, எனது தாயாரின் வயது சான்றிதழை இணைத்து மோசடி செய்ததால், ரமேஷ்குமாரின் மனைவி யார் என்று முடிவுக்கு வர முடியாமல் இந்த வழக்கில் போலீசாரும் தற்போது தவித்து வருகிறார்கள்.