சட்டத்துறை அமைச்சர் பேச்சை ஹைகோர்ட் அளவுக்குக்கூட‌ மதிக்காத ஓ.என்.ஜி.சி.!

 

சட்டத்துறை அமைச்சர் பேச்சை ஹைகோர்ட் அளவுக்குக்கூட‌ மதிக்காத ஓ.என்.ஜி.சி.!

‘நீ ஏதாவது லூசு மாதிரி ஒளறிகிட்டே இரு’ என அமைச்சரின் பேச்சை சற்றும் பொருட்படுத்தாது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக விளைநிலங்கள் வழியே ராட்சச குழாய்களை ஓ.என்.ஜி.சி. தொடர்ந்து பதித்துவ‌ருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழகத்திற்குள் அதனை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்திலேயே சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இரண்டு நாட்களுக்கு முன்பு உறுதியளித்தார். ‘நீ ஏதாவது லூசு மாதிரி ஒளறிகிட்டே இரு’ என அமைச்சரின் பேச்சை சற்றும் பொருட்படுத்தாது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக விளைநிலங்கள் வழியே ராட்சச குழாய்களை ஓ.என்.ஜி.சி. தொடர்ந்து பதித்துவ‌ருகிறது.


Farmers protest


நாகப்பட்டினம், மாதானத்தில் இருந்து மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாய நிலங்களின் வழியே ராட்சத குழாய்கள் புதைக்கும் பணியை கெயில் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது அமைச்சர் சட்டமன்றத்தில் உறுதியளித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போதே, விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. முடிகண்டநல்லூர், உமையாள்புரம் ஆகிய ஊர்களில், பத்துநாட்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.