சச்சின் பைலட் முதல் சித்தராமையா வரை… ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ள பா.ஜ.க!

 

சச்சின் பைலட் முதல் சித்தராமையா வரை… ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ள பா.ஜ.க!

ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவையே பா.ஜ.க தன் பக்கம் இழுத்துவிட்டது. அவருடன் சேர்த்து 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் வாங்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய அரசியல் சாணக்கியத்தனம் என்று பா.ஜ.க தொண்டர்களும் ஊடகங்கள் இதை கொண்டாடுகின்றன.

சச்சின் பைலட் முதல் சித்தராமையா வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரை இழுக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவையே பா.ஜ.க தன் பக்கம் இழுத்துவிட்டது. அவருடன் சேர்த்து 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் வாங்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய அரசியல் சாணக்கியத்தனம் என்று பா.ஜ.க தொண்டர்களும் ஊடகங்கள் இதை கொண்டாடுகின்றன. இந்த நிலையில் இன்னும் பலர் இந்த வரிசையில் பா.ஜ.க பக்கம் தாவ உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

jyoto

ஜோதிராதித்ய சிந்தியாவைப் போலவே ராஜஸ்தான் முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும் என்று சச்சின் பைலட் நினைத்திருந்தார். ஆனால், அவருக்கு பதவி மறுக்கப்பட்டது. அவரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை இழுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை வீழ்த்தவும் பா.ஜ.க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

modi-and-amit-hsha

இது தவிர முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர்.பி.என்.சிங், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த் தியோரா, ஹரியானாவில் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற காரணமாக இருந்த குல்தீப் பிஷ்னோய், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா என்று ஒரு பட்டியலையே தயாரித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

kuldeep-bishoin

பா.ஜ.க முழுக்க காங்கிரஸ் தலைவர்களாக இருக்க… அவர்கள் தங்கள் சித்தாந்தங்களை விட்டுவிட்டு எங்கள் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுதானே வருகிறார்கள்… அதனால் மகிழ்ச்சியே என்று பா.ஜ.க நிர்வாகிகள் தங்களை தாங்களே சமாதானம் செய்துகொண்டு வருகின்றனர்