சசிகுமார் படத்தில் முதன் முறையாக ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி

 

சசிகுமார் படத்தில் முதன் முறையாக  ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி

நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி  நடிக்க ஒப்ந்தமாகியுள்ளார்.

சென்னை: நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான  சசிகுமாரின் நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில், கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

niki

அவருக்கு ஜோடியாக நடிகை  நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

sasi

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளர்   கதிர்வேலு இயக்குகிறார். இப்படத்தில் சசிகுமார் ஐடி-யில் பணிபுரியும் நபராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.செந்தூர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு  பொள்ளாச்சியில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.