சசிகலா விடுதலையானால் கதையே மாறிவிடும் – சுப்ரமணியன் சுவாமி

 

சசிகலா விடுதலையானால் கதையே மாறிவிடும் – சுப்ரமணியன் சுவாமி

திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில்பங்கேற்க சசிகலா பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா வருவதை டி.டி.வி.தினகரன் தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் அல்லது அதற்கு முன்னதாகவே சசிகலா வெளியே வந்துவிடுவார்.

திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் திருமணம் நேற்று நடைபெற்றது. இதில்பங்கேற்க சசிகலா பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா வருவதை டி.டி.வி.தினகரன் தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் அல்லது அதற்கு முன்னதாகவே சசிகலா வெளியே வந்துவிடுவார். வந்ததும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிப்பார். ஒன்று அமைச்சர்கள் அணி மாற வேண்டும், இல்லை என்றால் ஒவ்வொருவர் பற்றிய ரகசியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து அவர்கள் அரசியல் வாழ்வே அஸ்தமனமாகிவிடும் என்ற பயம் ஆளுங்கட்சியை சேர்ந்த பெருந்தலைகளுக்கு உள்ளது. இதனால் அணி மாற அமைச்சர்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவை சந்திக்க வேண்டாம், நாம் இணைந்து கட்சியை நடத்தலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவுடன் தொடர்பு வைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

Subramanian Swamy

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, சிஏஏவால்  யாருடைய குடியுரிமையும் பறிக்கப் போவதில்லை. யாருக்கெல்லாம் குடியுரிமை கொடுக்க வேண்டுமோ கொடுத்தாகிவிட்டது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சி.ஏ.ஏ. அமல்படுத்தியாகிவிட்டது. இந்துக்கள் ஒற்றுமையைக் கெடுப்பதற்கும் நாட்டின் பெயரைக் கெடுப்பதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர். நாட்டை விட்டு முஸ்லிம்கள் விரட்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரம் இல்லை. 

நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. சரி செய்ய வேண்டும். ரஜினிகாந்த் இந்து மதத்திற்காக எப்படி சோ விழாவில் பேசினது போன்று எதிர்காலத்தில் பேசினால் ஒத்துழைப்பு கொடுப்பேன். பாஜக தனிமையாக நின்று ஜெயிக்க முடியும்; ஆனால் அதற்கான முயற்சி செய்யவில்லை. புதிய அகில இந்திய பாஜக தலைவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும், தமிழக பாஜக தலைமைக்கு இப்போது அவசரம் இல்லை. அதிமுகவை பாஜக இயக்குவதாக தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் போராட்டம் செய்யலாம்; அச்சமுண்டாக்கி பொய் சொல்லி ஆர்பாட்டம் செய்யக்கூடாது.

sasikala

சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும், சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம்.  தமிழ்நாட்டில் சினிமா தான் பார்ப்பார்கள், சட்டம் படிக்க மாட்டார்கள். இந்திய- அமெரிக்கா நெருங்கக்கூடாது , நாம் நெருங்கினால் சீனாவிற்கு ஆபத்து. நமது நெருங்கிய நண்பர் சீனா, அதை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.