சசிகலா மீது காவிகளின் கோபம்… உறுதி செய்த ரஜினியின் தர்பார்!

 

சசிகலா மீது காவிகளின் கோபம்… உறுதி செய்த ரஜினியின் தர்பார்!

தர்பார் படத்தில் சசிகலா பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்திருப்பதன் மூலம் காவிகளின் கோபம் சசிகலா மீது இன்னும் அதிகமாக உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தில் அரசியல் இருக்காது என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்

தர்பார் படத்தில் சசிகலா பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்திருப்பதன் மூலம் காவிகளின் கோபம் சசிகலா மீது இன்னும் அதிகமாக உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தில் அரசியல் இருக்காது என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார். ஆனால், சசிகலாவை விமர்சிக்கும் வகையில் இரண்டு காட்சிகள் இருப்பது அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

darbar-shooting

படத்தில் ரஜினிகாந்த் சிறைக்குள் நடந்து சென்றுகொண்டிருப்பார். அப்போது, கைதி ஒருவர் சிறையில் செல்போனில் பேசிக்கொண்டிருப்பார். இதைப் பார்த்த உயரதிகாரியான ரஜினி, வார்டனிடம் ஜெயிலில் செல்போன் எல்லாம் உண்டு போல என்று சொல்வார். அதற்கு வார்டன், காசு இருந்தால் போதும் சார், ஷாப்பிங்கே சென்று வரலாம் என்பார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றுவந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. அதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்த காட்சி இருந்தது.
மற்றொரு காட்சியில், சிறையில் ஆள்மாறாட்டம் நடைபெறும். இது குறித்து ரஜினி உயர் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறுவர். அப்போது அந்த அதிகாரி, “நான்கூட தென் இந்தியாவில் இதே போல் சிறையிலிருந்து ஒரு பெண் கைதி வெளியே போய்வருவதாக கேள்விப்பட்டேன்” என்பார். இதுவும் சசிகலாவை நேரிடையாக நினைவுபடுத்துகிறது. 

sasikala-098

இந்த இரண்டு காட்சிகளுமே ரஜினிகாந்த் பேசவில்லை என்றாலும், அவர் முன்னிலையில் மற்றவர்கள் பேசுகின்றனர். இதனால் அ.ம.மு.க.வினர் தர்பார் மீது கடுப்பில் உள்ளனர். தமிழர் ராக்கர்ஸ் எப்போது வெளியிடும், அதை பரப்பலாம் என்று காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த் வலதுசாரி சிந்தனையாளராக பார்க்கப்படுகிறார். அவர் தமிழக பா.ஜ.க-வுக்கு தலைமை ஏற்பார் என்று அக்கட்சியினர் காத்துக்கிடக்கின்றனர். ஆனால், எனக்கு காவி நிறம் பூச முயற்சிக்கிறார்கள் என்று ரஜினி கூறுகிறார். ஆனால் ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோருடன் மிக நெருக்கமாக இருக்கிறார் ரஜினி. இவர்களின் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் குழப்பம் தந்தாலும், ஒன்றை மட்டும் இந்த படம் உறுதி செய்துள்ளது. காவிகளுக்கு சசிகலா மீது இன்னும் கோபம் அதிகமாகவே உள்ளது என்பதையே இந்த காட்சிகள் காட்டுகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.