“சசிகலா பின்வாங்கியது வேதனையாக உள்ளது” : த.கொ.இ.பே. குமுறல்!

 

“சசிகலா பின்வாங்கியது வேதனையாக உள்ளது” : த.கொ.இ.பே. குமுறல்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதேபோல் மதிமுக, காங்கிரஸ், விசிக, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் உள்ளது. திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2, விசிக 3, முஸ்லீம் லீக் தொகுதிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

“சசிகலா பின்வாங்கியது வேதனையாக உள்ளது” : த.கொ.இ.பே. குமுறல்!

இந்த சூழலில் சசிகலா தான் அரசியலிருந்து விலகுவதாக அறிவித்தார். சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் அரசியல் விலகல் தினகரனுக்கு அதிர்ச்சியாகவும், அதிமுகவுக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது.

“சசிகலா பின்வாங்கியது வேதனையாக உள்ளது” : த.கொ.இ.பே. குமுறல்!

இந்நிலையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு, சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சசிகலா அரசியல் விலகலால் அதிமுகவுக்கு எந்த சாதகமும், பாதகமும் இல்லை. அவர் சிறையிலிருந்து சென்னை வந்ததும் அவரை சென்று பார்த்தேன். 40 நிமிடம் என்னிடம் பேசினார். அவர் அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசவில்லை. அவர் உடல்நலனை பற்றி தான் பேசினார். சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதை எனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்” என்றார்