சசிகலா தண்டனை காலத்திற்கு முன் விடுதலையாக மாட்டார் : கர்நாடக சிறை அதிகாரி தகவல்..!

 

சசிகலா தண்டனை காலத்திற்கு முன் விடுதலையாக மாட்டார் : கர்நாடக சிறை அதிகாரி தகவல்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சசிகலாவின் சிறைத் தண்டனை முடிய இன்னும் ஒரு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில், நன்னடத்தையின் அடிப்படியில் அவர் தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே விடுவிக்கப்படுவார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கருத்துக்கள் எழுந்தன.

Sasikala

 சிறையில், சசிகலா ஷாப்பிங் போனதாகவும் லஞ்சம் கொடுத்து அவருக்கென தனியாக சமையல் செய்யப்படுவதாகவும் சிறை அதிகாரி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். சசிகலா மீது சிறை அதிகாரி வைத்த புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டது. அதனையடுத்து, வரும் நவம்பர் 1 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் உதய நாள் கொண்டாடப் படவிருப்பதால், பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சில கைதிகளை நன்னடத்தையின் காரணமாகக் கர்நாடக அரசு  விடுதலை செய்யவிருக்கிறது.

Mehrith

அந்த பட்டியலில் சசிகலாவும் இருக்கிறாரா என்று பிரபல செய்தி நிறுவனம் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த  கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், சசிகலா தண்டனைக் காலத்திற்கு முன்பு விடுதலை செய்யப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.