சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

 

சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அமித்ஷா எங்களிடம் வைக்கவில்லை என்றும் அப்படி வெளியாகும் செய்திகள் தவறு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வரும் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளில் வெற்றிபெறும். தொண்டர்கள் எழுச்சியுடன் உள்ளனர். அதிமுக உடன் அமமுகவை கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக முடிவெடுக்க முடியாது. அவர்கள் இது தொடர்பாக எங்களை நிர்பந்திக்கவும் இல்லை.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அமித்ஷா எங்களிடம் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் அது முடியும் விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கையும் வெளியாகும்” என தெரிவித்தார்.