சசிகலாவுக்கு சமாதான கொடி காட்டுகிறாரா எடப்பாடி? டி.டி.வி உஷார்!

 

சசிகலாவுக்கு சமாதான கொடி காட்டுகிறாரா எடப்பாடி? டி.டி.வி உஷார்!

கடும் வெயிலில்,கூட்டம் குறைவாக இருக்கும் கோபத்தில் எடப்பாடி பேசுவதால், விளைவை யோசிக்காமல் பேசிவருகிறாரா, இல்லை இது அவரது ‘ப்ளான் பி’-யா? என்று தெரியாமல் கட்சிக்காரர்களே குழப்பத்தில் இருக்கிறார்கள்

திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளில் இன்று பிரச்சாரத்தில் இருக்கும் எடப்பாடி தி.மு.க-வை தாக்க ஒரு புதிய அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறார். அது,சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலில் இருக்கும் சசிகலாவுக்கு அனுப்படும் சமாதான சிக்னலாகவும் பார்க்கப்படுகின்றது!

edappadi palanisamy

கடும் வெயிலில்,கூட்டம் குறைவாக இருக்கும் கோபத்தில் எடப்பாடி பேசுவதால், விளைவை யோசிக்காமல் பேசிவருகிறாரா, இல்லை இது அவரது ‘ப்ளான் பி’-யா? என்று தெரியாமல் கட்சிக்காரர்களே குழப்பத்தில் இருக்கிறார்கள்.

stalin

இதுவரை இல்லாத முறையில் இன்றைய கூட்டங்களில் பேசும்போதெல்லாம், ‘புரட்சித்தலைவி அம்மாவின் மரணத்துக்கு காரணம் திமுக தான். அவர்கள் அம்மா மீது பொய் வழக்குகளைப் போட்டு, சித்திரவதை செய்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலில்தான் அம்மா உடல் நலம் குன்றி இறந்து போனார்’ என்று திரும்ப திரும்ப பேசுகிறார்!

edappadi palanisamy

இதை கேட்கும், அ.தி.மு.க தொண்டர்களுக்கும்,பொது மக்களுக்கும் ஒரு அடிப்படை சந்தேகம் வரும். வருமானத்துக்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் முதல் குற்றவாளி.அவர் மீது தி.மு.க போட்டது பொய் வழக்கென்றால் தங்கள் தலைவி நிரபராதி என்று எடப்பாடியார் சொல்வதாக ஆகிறது.

sasikala

அவர் நிரபராதி என்றால், ஏ-2 சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் நிரபராதிகள் என்று ஆகிறது. ஏனென்றால்,இவர்கள் யாரும் அரசு ஊழியர்கள் அல்ல. அந்த வழக்கு இவர்களுக்கு பொருந்தாது! ஆகவே என்ன சொல்கிறார் எடப்பாடி, அவரது திட்டம் என்ன? ஒரு வேளை தேர்தலில் தோற்று கட்சி மீண்டும் சசிகலாவின் கைக்கு போய்விட்டால் இந்தப் பேச்சு, தன்னைக் காப்பாற்றும் இன்ஷூராக  பயன்படும் என்று நினைக்கிறாரா?

eps, ops

இல்லை, ஓ.பி.எஸ்-ஸை வில்லனாக்கிவிட்டு இவர் மட்டும், மன்னார்குடியிடம் மண்டியிட்டு விட தீர்மானமா? இல்லை, இது எப்போதும் போல எடப்பாடியின் இன்னொரு சவாலா என்பது யாருக்கும் புரியவில்லை! இது புதுசா இருக்கே,என்று அ.தி.மு.க தொண்டர்களே அதிசயமாக பார்க்கிறார்கள்.

ttv dhinakaran

இந்த கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு உடன் பிறப்பு கேட்டிருக்கார்-‘எடப்பாடி இன்னும் ஒரு சவால்தான் விடலை, இப்படியே போனால், ஸ்டாலினுக்கு நான் சவால் விடுகிறேன், இதோ நான் தினந்தோறும் இரட்டை இலைக்கும், தாமரைக்கும் ஓட்டுக் கேட்கிறேனே, உங்களால் ஒரே ஒரு முறை, இரட்டை இலைக்கும் தாமரைக்கும் ஓட்டு கேட்க முடியுமா, தைரியமிருக்கிறதா’-ன்னு மட்டும் தான் கேட்கல! ஸ்…அப்பா என்ன வெய்யில்!

இதையும் வாசிங்க

பக்கா அரசியல்வாதியான கமல்ஹாசன்; கொதிக்கும் எழுத்தாளர்!