“சங்கத்தமிழன் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை” : காரணம் இதுதானாம்!

 

“சங்கத்தமிழன் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை” : காரணம்  இதுதானாம்!

இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  படம் ‘சங்கத்தமிழன்

சென்னை:  விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  படம் ‘சங்கத்தமிழன்’. இதில் விஜய் சேதுபதியுடன் நடிகை ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்  இவர்களுடன் சூரி, நாசர், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

sethupathi

காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில்  ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் லிப்ரா புரொடக்ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நவம்பர் 8 அல்லது 15 ஆகிய இரு தேதிகளில் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

முன்னதாக தீபாவளிக்கு விஜய் யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய இரு படங்கள் வெளிவரும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.