சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!

 

சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!

சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் நன்மைகள் பற்றியும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றியும் பார்போம்.

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் வளர்பிறை சதுர்த்தியை வர சதுர்த்தி என்றும், கிருஷ்ண பட்சம் தேய் பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் கூறுவார்கள்.

vinaygar

சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். 

இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தியாகும்.  சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல் துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும்.

vinyagar

இந்த சிறப்பான விரதத்தை கடை பிடித்தே   அங்காரகன் என்ற செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர்.  சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்பது வரலாற்று கூற்று.

vinayagar

சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்க வேண்டும்.

மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 

vinayagar

அதனையடுத்து விநாயகரை வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளில் சந்திரனை தரிசித்து விட  வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம்.தேய்பிறை  செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும் மேலும் எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

vinaygar14

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவதால், வாழ்க்கையில் தடங்கல்கள் நீங்கும். செவ்வாய் தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். மங்கல வாழ்வு அமையும். சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

“ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்”

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி கணபதியை தியானித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.