சக மாணவரை கட்டிப்பிடித்த மாணவி: கடுப்பான பல்கலைக்கழகம்; வைரல் வீடியோ!

 

சக மாணவரை கட்டிப்பிடித்த மாணவி: கடுப்பான பல்கலைக்கழகம்; வைரல் வீடியோ!

சக மாணவரை கட்டிப்பிடித்த காரணத்தினால் மாணவியை  பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கிய சம்பவம் எகிப்தில் அரங்கேறியுள்ளது.

எகிப்து: சக மாணவரை கட்டிப்பிடித்த காரணத்தினால் மாணவியை  பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கிய சம்பவம் எகிப்தில் அரங்கேறியுள்ளது.

எகிப்தில் இளைஞர் ஒருவர் கையில் பூங்கொத்துடன் பெண் ஒருவர் முன் மண்டியிட்டு அப்பெண்ணுக்கு தன் காதலை தெரிவிப்பது போன்று இருந்தது. அத்துடன் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிபிடித்து கொண்டனர்.  இந்த வீடியோவானது கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

 

இந்நிலையில் சக மாணவரை கட்டிப்பிடித்த காரணத்தினால் அல் அசார் பல்கலைக்கழகம் மாணவியை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியுள்ளது. திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து கொள்வது சமுதாயத்தின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வீடியோ பல்கலைக்கழகத்தில் வைத்து எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

மாணவியின் செயலால் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி பல்கலைக்கழகம் மாணவியை நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.