சக்தி கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குரல் கொடுத்தவர்

 

சக்தி கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குரல் கொடுத்தவர்

நேற்றோடு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வந்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன.சிவாஜிக்கனேசன் கட்டபொம்மனுக்கு உயிர்கொடுத்தார் என்றால்,சக்தி கிருஷணசாமி கட்டபொம்மனுக்கு தமிழ் கொடுத்தவர்.

நேற்றோடு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வந்து 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன.சிவாஜிக்கனேசன் கட்டபொம்மனுக்கு உயிர்கொடுத்தார் என்றால்,சக்தி கிருஷணசாமி கட்டபொம்மனுக்கு தமிழ் கொடுத்தவர்.

சிவாஜி என்கிற பட்டத்து யானையப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த பட்டத்து யானை அணிந்துவந்த ஆபரணங்களை, அதை அணிவித்து அலங்கரித்தவர்களை நாம் அதிகம் கவனித்ததில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சக்தி கிருஷ்ணசாமி!

sivaji

‘எங்களோடு வயலுக்கு வந்தாயா,ஏற்றம் இரைத்தாயா’ என்கிற சக்தி கிருஷ்ணசாமியின் வசனத்தை பேசிப்பார்க்காத தமிழர்கள் யாராவது இருக்க முடியுமா.சக்தி நாடகசபா என்கிற இவருடைய பாய்ஸ் கம்பெனியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான் சிவாஜி கணேசன், நம்பியார்,வி.கே ராமசாமி போன்ற மகத்தான கலைஞர்கள். 

இவர்களெல்லாம் சினிமாவில் நடித்துச் சிறந்தபோது சக்தி கிருஷ்ணசாமியும் சினிமாவில் வசனகர்த்தா ஆனார்.வீரபாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,எங்கள் வீட்டுப் பிள்ளை,படகோட்டி என்று இரண்டு சூப்பர்ஸ்டார்களுக்கும் எழுதினார்.

sivaji

வீர வசனங்கள் மட்டுமல்ல உணர்ச்சுகரமான காட்சிகளிலும் தனித்த சொல்லாடல்களால் கவனிக்க வைத்தவர். கட்டபொம்மனின் இறுதிக்காட்சியில் சிவாஜி விரக்தியுடன் பேசும் ஒரு வசனமுண்டு, ‘தம்பி,அஞ்சாத சிங்கமே…அன்று போரில் மடிந்த ஆயிரமாயிரம் வீரர்களுடன் நானும் மடிந்திருக்க வேண்டும். தப்பி ஓடிய எனக்கு இந்த இழிவுச்சாவு ஒரு நல்ல பரிசு’!

sakthikrishnasamy

அதே போல கர்ணன் திரைப்படத்தில் குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சி!
எங்கள் வீட்டுப் பிள்ளையில் ,படகோட்டியில் வீர வசனங்களுக்கு இணையாக நகைசுவைக் காட்சிகளையும் புதிய கோணத்தில் எழுதினார்.

தமிழ் திரையில் இளங்கோவன்,கலைஞர் கருணாநிதி, ஏ.பி நாகராஜன் போன்றோருக்கு இணையான இடம் சக்தி கிருஷ்ண சாமிக்கும் உண்டு.