க்ளைபோசேட் பூச்சிக்கொல்லிக்கு தடை விதிக்க நடிகர் கார்த்தி வலுயுறுத்தல்!

 

க்ளைபோசேட் பூச்சிக்கொல்லிக்கு தடை விதிக்க நடிகர் கார்த்தி வலுயுறுத்தல்!

உலகளவில் பரவலாக பயன்படுத்தக் கூடிய க்ளைபோசேட் பூச்சிக்கொல்லியால் புற்றுநோய் ஏற்படுவதால் அதனை தடை செய்ய வேண்டும் என நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: உலகளவில் பரவலாக பயன்படுத்தக் கூடிய க்ளைபோசேட் பூச்சிக்கொல்லியால் புற்றுநோய் ஏற்படுவதால் அதனை தடை செய்ய வேண்டும் என நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மான்சாண்டோ என்ற இரசாயண தயாரிப்பு நிறுவனத்தின் ‘க்ளைபோசேட்’ என்ற பூச்சுக்கொல்லி பாதுகாப்புத்தன்மை இன்றி இருப்பதால், புற்றுநோய் ஏற்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்காவில் நடந்த வழக்கு ஒன்றில், பாதிக்கப்பட்டவருக்கு மான்சாண்டோ நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ‘க்ளைபோசேட்’ பூச்சுக்கொல்லிக்கு கலிபோர்னியா நீதிமன்றம் தடை விதித்தது.

பெரும்பாலும் விவாசாய நிலங்களில் இந்த ‘க்ளைபோசேட்’ பூச்சுக்கொல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகக் கூறி ஆந்திர அரசும் இந்த பூச்சுக் கொல்லியை தடை செய்துவிட்டது.

இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி இத்தகைய கொடிய பூச்சுக்கொல்லியை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், க்ளைபோசேட் பூச்சுக்கொல்லிக்கு தடை விதித்து ஆந்திர அரசு வெளியிட்ட அரசாணையின் நகலையும் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவராகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.