க்ரீம் பிஸ்கட்டுக்கு பதிலாக டூத் பேஸ்ட்: ஆதரவற்ற நபரை வைத்து பிராங் ஷோ செய்த இளைஞர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!?

 

க்ரீம் பிஸ்கட்டுக்கு பதிலாக டூத் பேஸ்ட்: ஆதரவற்ற நபரை வைத்து பிராங் ஷோ செய்த  இளைஞர்:  அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!?

பிராங்க் ஷோ செய்த  இளைஞர் ஒருவருக்குச் சிறைத்தண்டனை வழங்கியிருக்கும்  சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.  

ஸ்பெயின்: பிராங்க் ஷோ செய்த  இளைஞர் ஒருவருக்குச் சிறைத்தண்டனை வழங்கியிருக்கும்  சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.  

kanguva

ஸ்பெயின்  நாட்டை சேர்ந்த கங்குவா என்ற இளைஞர் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பலருடன் பிராங்க் ஷோ நடத்தி அந்த வீடியோக்களை யூ ட்யூபில் அப்லோடு செய்து வந்தார். இந்நிலையில் கங்குவா ஆதரவற்ற ஒருவருக்கு  க்ரீம் பிஸ்கட்டுகளில், க்ரீமுக்கு பதிலாகப்  பற்பசையைத் தடவிக் கொடுத்துள்ளார்.

kaguva

அதனை வாங்கு உண்ட ஆதரவற்ற நபர் வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதனை வீடியோவாக எடுத்த கங்குவா யூட்யூபில் பதிவேற்றினார். இதற்குப் பலத்த வரவேற்பு கிடைக்கும் என்று  நினைத்த அவரின் சின்னப்புத்திக்கு எதிராக  பலரும் கண்டன குரல்களைப் பதிவு செய்தனர். கங்குவாவின் மனிதாபிமானமற்ற செயலால் அவர் மீது காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. 

kanguva

இந்நிலையில் இந்த வழக்கு பார்சிலோனா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  கங்குவா ரென்னுக்கு 20 ஆயிரம் யூரோக்கள் அபராதமும், 15 மாத சிறைத்தண்டனையும்  விதித்து உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்குச் சொந்தமான சமூக வலைதளங்களை  5 ஆண்டுகளுக்கு முடக்க வேண்டுமென்றும் அதிரடியாகத் தீர்ப்பளித்தது.  நீதிமன்றம் கங்குவாவுக்கு அளித்துள்ள இந்த தீர்ப்புக்குப் பலவேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.