கௌதம் மேனன் படத்தில் ராணுவ அதிகாரியாக இணையும் அனுஷ்கா?!

 

கௌதம் மேனன் படத்தில் ராணுவ அதிகாரியாக இணையும்  அனுஷ்கா?!

இப்படத்தை  வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ்  தயாரித்து  வருகிறார். 

இயக்குநர்  கௌதம் வாசுதேவ் மேனனின் எனை  நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நீண்ட இழுபறிக்குப் பிறகு திரைக்கு வந்தது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் இப்படத்தை வெளியிட்டார். 

ttn

இதையடுத்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் ‘பப்பி’ படத்தில் ஹீரோவாக நடித்தவரும் ஐசரி கணேஷ் மகனுமான வருணை  வைத்து  ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை  வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ்  தயாரித்து  வருகிறார். 

ttn

இந்நிலையில் இப்படத்தில் நடிகை அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். ராணுவம் சம்பந்தப்பட்ட ஆக்சன் படமாக உருவாகவுள்ள  இப்படத்தின் கதையை  குருதிப்புனல் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரே  எழுதவுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.