கௌசல்யா மறுமணத்தால் சமூகத்திற்கு என்ன நன்மை?: போட்டு உடைக்கிறார் டாக்டர் ஷாலினி

 

கௌசல்யா மறுமணத்தால் சமூகத்திற்கு என்ன நன்மை?: போட்டு உடைக்கிறார் டாக்டர் ஷாலினி

உடுமலை கௌசல்யா மறுமணம் செய்து கொண்டது குறித்து   தன் கருத்துக்களை மனநல மருத்துவர் ஷாலினி பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னை: உடுமலை கௌசல்யா மறுமணம் செய்து கொண்டது குறித்து  தன் கருத்துக்களை மனநல மருத்துவர் ஷாலினி பகிர்ந்து கொண்டுள்ளார்.

உடுமலை சங்கர் கொலையில் பாதிக்கப்பட்ட உடுமலை கௌசல்யா பறையிசை குழு நடித்த வந்த சக்தி என்பவரை கடந்த 9-ஆம் தேதி கோவையில்  திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கோவை காந்திபுரத்தில்  நடைபெற்றது. கௌசல்யா மறுமணம் செய்து கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தாலும் சிலர் அவரை வசைபாடி வருகின்றனர்.

shalini

இது குறித்து மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினியிடம், கௌசல்யா திருமணத்தால் சமூகத்திற்கு என்ன நன்மை? என்று கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது;- ‘முதல் விஷயம் நம்ம ஊர்ல ஒரு பெண், பகிரங்கமாக துணிந்து மறுமணம் செய்வது இனி வரக்கூடிய பெண்கள் சமுதாயத்திற்கு மிகவும் வரவேற்கத்தக்க போக்கு அப்படிங்குறதுனால, கௌசல்யாவாக இருக்கட்டும், வேறு யாராக இருக்கட்டும் அவர்கள் மறுமணம் செய்வதை நாம் கண்டிப்பாக வரவேற்போம்.  கௌசல்யா செய்யும் போது, இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக வரவேற்பதற்கு காரணம், அந்த பெண் மிகப்பெரிய துன்பத்திலிருந்து மீண்டு, மீண்டும் துணைதேடும் படலத்தில் இறங்கியிருக்காங்க அப்படின்னா அவங்க ஆரோக்கியமான ஒரு மனநிலைக்கு வந்துருக்காங்க என்பதால், அவங்க மனநலத்தை வாழ்த்துறது அடுத்தகட்ட நடவடிக்கை. 

 

இதை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது அப்படின்னா, தன் வீட்டில் ஒரு மகளுக்கு இப்படி ஆனால் கூட பரவாயில்லை தூங்கி சாப்பிட்டுட்டு, வீட்டிலேயே பத்திரமாக இரும்மா.துணைதேடுவதெல்லாம் தேவையில்லை.இப்படி பத்திரமாக இருப்பது தான் ஒரு பெண்ணுக்கு லட்சணம் என்று இன்னும் நம்ம மனிதர்கள் நம்புறாங்க.குறிப்பாக ஆண்கள் அப்படி தான் நம்புறாங்க. அது அவங்களோட அறியாமை. இந்த அறியாமைக்கு நீங்க எத்தனை விதமான டிசைன் போட்டாலும் அது வெறும் அறியாமை தான். அது தான் நீ அவனை கொன்னுருக்கலாம், இவனை கொன்னுடுயெல்லாம் அந்த அறியாமையோட வெவ்வேறு முகங்கள். இந்த வெவ்வேறு முகங்களுக்கு நம்ம வெவ்வேறு பதில்களெல்லாம் சொல்லமுடியாது. இந்த அறியாமையிலிருந்து மீண்டு சீக்கிரம் வெளியே வாங்க. உலகம் எவ்வளவோ வேகமாக போயிட்டு இருக்கு.நம்ம டார்க்இயர் ஸ்பீடுக்கு பின்னாடி போனோம் அப்படின்னா நம்மளால பிழைக்க முடியாது. அதனால கொஞ்சம் மாறுங்க அப்படின்னு தான் நம்ம சிபாரிசு செய்யமுடியும்’ என்றார்.