கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

 

கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ்குமார் கைதான எப்படி என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை: கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ்குமார் கைதான எப்படி என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுமி படுகொலை 

harassment

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ் என்பவற்றின்  6 வயது மகள் கடந்த 25ஆம் தேதி காணாமல்  போன நிலையில்,  அதிர்ச்சியடைந்த பெற்றோர்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்  அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை, தேடும் பணியில் தீவிரம் காட்டினர்.  இதையடுத்து சிறுமி கஸ்தூரி நாயக்கன் புதூர் என்ற இடத்தில் சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கத்தி காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பள்ளத்தில் சடலமாக கிடந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பாலியல் வன்கொடுமை 

child abuse

இதையடுத்து சிறுமி  கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது  பிரேத பரிசோதனையில்   தெரியவந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில், தமிழக காவல்துறை 14 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். 

கைதான சந்தோஷ்குமார் 

abuse

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில்  தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சிறுமியின் தாத்தா வீட்டிற்கு சந்தோஷ்குமார் அடிக்கடி சென்றுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 

கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் 

abuse

அதில், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,அப்போது சிறுமி சத்தம் போட்டதால், பதட்டத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால்  கொலை நடந்த அன்று  எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். அதனால் தனது டி- ஷர்ட்டை கொண்டு  சிறுமியின் சடலத்தை மறைத்த அவர், அதனை வீட்டின் மூலையில் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் உண்மையில், சிறுமி சடலமாக கிடந்த இடத்தில் இருந்த  டி-ஷர்ட்டை வைத்துத்தான் போலீசார் சந்தோஷ்குமார் மீது சந்தேகமடைந்துள்ளனர். அதனடிப்படையில் அவரை கைது செய்த போதுதான் இந்த வழக்கிலிருந்த மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துள்ளது. 

கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

arrest

சந்தோஷ்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இதில் எத்தனை பேருக்குத் தொடர்பு உள்ளது? அது யார் யார் என்பது தெரிய வரும். இதனிடையே  கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமாரை வரும் 15 ஆம் தேதி வரை காவலில் அடைக்கக் கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: கணவன் – மாமியார் கொடுமை: பட்டினியால் உயிரிழந்த பெண்; சாகும் போது 20 கிலோ எடை மட்டுமே இருந்த கொடூரம்!