கோவை இரட்டை கொலை வழக்கு : மனோகரனுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை

 

கோவை இரட்டை கொலை வழக்கு : மனோகரனுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை

கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மனோகரனுக்குத் தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் கடத்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. 

childre n

இந்த தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கைக் கடந்த  அக்டோபர் மாதம் விசாரித்த நீதிபதிகள் மனோகரனுக்கு விதித்த தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். கடந்த 7 ஆம் தேதி மீண்டும் அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பாலினாரிமன் தலைமையில் அமர்வுக்கு வந்தது. அதில், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி மனோகரன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனால், கடலூர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் மனோகரனுக்குத் தூக்குத் தண்டனை உறுதியாகியது. 

mangoran

இந்நிலையில், கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் மனோகரனுக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.