கோவையை அசத்தும் குழந்தை பிரியாணி! கூடவே புதுசா ‘பொரியல்’ பிரியாணி

 

கோவையை அசத்தும் குழந்தை பிரியாணி! கூடவே புதுசா ‘பொரியல்’ பிரியாணி

கோயம்புத்தூர் கெம்பட்டி காலனியில் இருக்கும் மாநகராட்சி உடற்பயிற்சி  கூடத்துக்கு எதிரில் இருக்கிறது சி.ஆர் பிரியாணி என்கிற உணவகம்.இதன் உரிமையாளர் பெயர் குழந்தைவேல் என்பதால் செல்லமாக குழந்தை பிரியாணி!

கோயம்புத்தூர் கெம்பட்டி காலனியில் இருக்கும் மாநகராட்சி உடற்பயிற்சி  கூடத்துக்கு எதிரில் இருக்கிறது சி.ஆர் பிரியாணி என்கிற உணவகம்.இதன் உரிமையாளர் பெயர் குழந்தைவேல் என்பதால் செல்லமாக குழந்தை பிரியாணி! 

c.r.briyani

குழந்தைக்கு குரு கரீம்பாய்.கரீம்பாய் கற்றுக்கொடுத்ததை இன்றுவரை அப்படியே பின்பற்றுவதாகச் சொல்கிறார் குழந்தைவேலு.இக்கடையின் சிறப்பு பிரியாணி என்றாலும்,இங்கே கிடைக்கும் மட்டன் ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ ஐட்டங்களும் சிறப்பே.

கிட்னிஃபிரை,தலைக்கறி,குடல்ஃபிரை,சுவரொட்டி,லிவர்ஃபிரை,சுத்துக்கொழுப்பு,நல்லி என்று பெரிய லிஸ்டே இருக்கிறது. இதுதவிர சிக்கன் மஞ்சூரியன், குழம்பு கலக்கி,மட்டன் சாப்ஸ்,மட்டன் வறுவல்,சிக்கன் சிந்தாமணி என்று விதவிதமான கறிவகைகளும் அணி வகுக்கின்றன.

menu

மட்டன் பிரியாணிக்கு கோவையில் இப்போது குழந்தை கடைதான் முன்னணி உணவகம்! அதிலும் எம்ட்டி பிரியாணி என்று கறித்துண்டுகள் இல்லாத பிரியாணியை வாங்கிக்கொண்டு,லிவர் ஃபிரை,மட்டன் வறுவல் என்று சைடிஷ்களோடு கலந்து புதுப்புது காம்போவாக ருசிக்கிறார்கள் கோவை வாசிகள்.

briyani

அடுத்தது,குழந்தைகடை ‘பொரியல்’ பிரியாணி.வேறொன்றும் இல்லை ஜெண்டில்மேன்,இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி முட்டைப்பொரியல் செய்து அத்துடன் எம்ட்டி பிரியாணியை கலந்து ஒரு புரட்டுப் புரட்டினால் பொரியல் பிரியாணி தயார்.சுவையும் புதிதாக இருக்கிறது.இந்த பொரியல் பிரியாணிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. 

420 சதுர அடியில் சின்னஞ்சிறு ஹோட்டல்தான்.ஆனால் இருபது வருடமாக அதே சுவையை தருவதால் கோவை நகரெங்கும் பெயர் சொன்னால் தெரிகிற அளவு பிரபலமாக இருக்கிறது.பகலில் 12 மணி முதல் மாலை 4.30 வரையும்,மாலையில் 6 மணிமுதல் இரவு 10.30 வரையும் இயங்குகிறது.