கோவையில் 3 காவலருக்கு கொரொனா: மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தகவல்!

 

கோவையில் 3 காவலருக்கு கொரொனா: மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தகவல்!

சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்  என்று அறிவித்துள்ளார். 

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை 1683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இருப்பினும் கொரோனா  பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சென்னை, கோவை, மதுரையில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்  என்று அறிவித்துள்ளார். 

tt

இந்நிலையில், கோவையில் 3 காவலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தகவல் தெரிவித்துள்ளார். போத்தனூரை சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஒரு ஆண் காவலர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் மூவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று காவலர்களும் 7 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில் இவர்களுக்கு  கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

tt

இதைத்தவிர 3 பேர் மற்றும் சிறுமுகையை சேர்ந்த 1 காவலர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். கடந்த 22ஆம் தேதி மொத்தம் 544 பணியிலிருந்து காவலர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்  537 பேருக்கு நெகட்டீவ் என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.