கோவையில் முடக்கப்பட்ட 14 பகுதிகள்..அதிரடி நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்!

 

கோவையில் முடக்கப்பட்ட 14 பகுதிகள்..அதிரடி நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்!

கோவையில் உள்ள 14 முக்கிய இடங்களை மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக முடக்கியுள்ளது. 

இந்தியாவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் மூன்று இடங்களில் தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி இருக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்கள் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் சென்னையும் அடுத்து கோவையும் இருக்கிறது. இதனால் கோவையில் உள்ள 14 முக்கிய இடங்களை மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக முடக்கியுள்ளது. 

ttn

அதில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மேட்டுப்பாளையம், மேட்டுக்கடை, சுந்தரபுரம், குனியமுத்தூர், உக்கடம், மீன் மார்க்கெட், ஆர்.எஸ் புரம், கே.கே புதூர், கவுண்டம்பாளையம் மற்றும் சேரன்மாநகர் ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்கத் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு மாவட்ட நிர்வாகம் தலைமையிலான அணிகளால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அவற்றின் வீட்டு வாசலில் வழங்கப்பட்டு வருகிறது. 

ttn

மேலும், பிற பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவது உள்ளிட்ட எல்லா நேரங்களிலும் முகமூடி அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.