கோவையில் போட்டியிட போகும் கமல்? ஆனால் தொண்டர்கள் எதிர்பார்ப்போ வேறு: பின்வாங்குவாரா நம்மவர்!?

 

கோவையில் போட்டியிட போகும் கமல்? ஆனால் தொண்டர்கள் எதிர்பார்ப்போ வேறு: பின்வாங்குவாரா நம்மவர்!?

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்  கோவையில் போட்டியிடுவார் என்று  தகவல் வெளியாகி உள்ளது.

கோவை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்  கோவையில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தல்

VOTE

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இரண்டையும் எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. 

“பேட்டரி டார்ச்”

KAMAL

முன்னதாக வருகின்ற மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களம் காணும் என அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் “பேட்டரி டார்ச்” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 

KAMAL

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின்  21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை  கமல்ஹாசன், கடந்த 20 ஆம் தேதி வெளியிட்டார். அதில் பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இடம்பெறவில்லை. 

கோவையில் போட்டியிடும் கமல்? 

KAMAL

இந்நிலையில், இன்று (மார்ச் 24) மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட உள்ளார். கமல் ஹாசன் தென் சென்னை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தென்சென்னையில் ஸ்ரீ ப்ரியாவும், கோவையில் கமல்ஹாசனும் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் இந்த தேர்தலில் கமல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில் வரும்  தேர்தலில் கமல் போட்டியிட மாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டம் 

KAMAL

எதுவாக இருந்தாலும் இன்று மாலை கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது அக்கட்சியின் தலைவர் எங்கு போட்டியிடுவார் என்பது தெரியவரும். 

இதையும் படிங்க: தமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன்: பிரபல நடிகர் அதிரடி; காரணம் இதுதானாம்!