கோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்!

 

கோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்!

கோவை மாவட்டம் சூலூரில் கேந்திரிய வித்தியாலாயாவில் பயின்று வரும் மாணவர்கள் பப்ஜி விளையாட்டில் தீவிரமாக இருந்ததையடுத்து காணாமல்போன சம்பவம் காவல்துறையினருக்கும் பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் சூலூரில் கேந்திரிய வித்தியாலாயாவில் பயின்று வரும் மாணவர்கள் பப்ஜி விளையாட்டில் தீவிரமாக இருந்ததையடுத்து காணாமல்போன சம்பவம் காவல்துறையினருக்கும் பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சூலூர் விமானப்படைப் பிரிவில் பணிபுரியும்  ஊழியர் பால்டா தத்தாரியீ என்பவரது மகன் கேதல் பால்டா த்தாரியா (14),மற்றும்  விவேக்சிங் என்பவரது மகன் வருண்சிங் ரத்தோர்(13)   ஆகிய இருவரும் சூலூர் அருகில் உள்ள விமானப்படை பள்ளியில் 9-ம் வருப்பு படித்து வந்துள்ளனர். குறிப்பாக இவர்கள் இருவரும் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் பப்ஜி விளையாடுவதை வழக்கமாகவைத்துள்ளனர். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இவர்கள் இருவரும் விடிய விடிய விளையாடும் அளவுக்கு தீவரம் காட்டியுள்ளனர். மேலும் பப்ஜி விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

பப்ஜி

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவரும் மாயமாகினர், இது குறித்து பள்ளியில் விசாரித்த போது அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியிவந்தது. மேலும் பப்ஜி விளையாடிய மாணவர்களைபெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்ட நண்பர்கள் இருவரும் பள்ளிக்குள் செல்லாமல், வெளியே சென்றுள்ளனர், அது அங்குள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் மாணவன் வருண் சிங் ரத்தோர் தனது வீட்டில் இருந்து 4000ரூபாய் எடுத்துசென்றுள்ளான் என தெரியவந்துள்ளது.

பின்பு இந்த இரண்டு சிறுவர்களும் காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள சைக்கிள் கடைகளுக்கு சென்று சைக்கிள் செயினை சரி செய்து விட்டு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக விமானப்படை வீரர்கள் தங்கள் அலுவலக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒத்துழைப்புடன் மாயமான தங்கள் மகன்களை அனைத்து இடங்களிலும் தேடிவந்துள்ளனர்.  காணாமல் போன இரு மாணவர்களும் மீண்டும் பப்ஜி விளையாட்டை லாகின் செய்து விளையாடி வருவதை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். காவல்துறையினர் மாயமான மாணவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து இடங்களிலும் தேடிவருகின்றனர். பப்ஜி விளையாட்டில் நேரம் செல்லச் செல்ல, விளையாடுபவரின் மேப் சிறிதாகிக் கொண்டே சென்று, அடுத்த இடத்திற்கு வெளியேறச் சொல்லி உத்தரவிடும். அதனை செய்யாவிட்டால் இறுதியில் கேம் ஓவர் என்றும் கூறப்படுகிறது. எனவே அந்தவகையிலும் இருவரும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.