கோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் பலி; ஓட்டுனர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு-சிசிடிவி காட்சிகள் வெளியீடு

 

கோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் பலி; ஓட்டுனர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு-சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை: கோவையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் அய்யர் ஹாஸ்பிடல் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள், மற்றும் அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது அப்பகுதி வழியாக வேகமாக வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கல்லூரி மாணவி, 2 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு சொகுசு கார் அதிவேகமாக வந்ததே காரணம் எனத் தெரிகிறது. சம்பவத்தையடுத்து, சொகுசு காரின் ஓட்டுநரை பிடித்து அடித்து, உதைத்த அப்பகுதி மக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், காரின் ஓட்டுநர் ஜெகதீசனை மீது நான்கு பிரிவுகளின் கீழ் கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.