கோவையில் ஆறு போலீசாருக்கு கொரோனா… காவல் நிலையம் மூடல்! பீதியில் காவல்துறை

 

கோவையில் ஆறு போலீசாருக்கு கொரோனா… காவல் நிலையம் மூடல்! பீதியில் காவல்துறை

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 544 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

கோவையில் போலீசார் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 544 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நான்கு காவலர்கள் குனியமுத்தூரில் ஒருவர், ஆயுதப்படை காவலர் ஒருவர் என மொத்தம் ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 538 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் வந்துள்ளது.

corona-positive.jpg

கொரோனா பாதிப்பு காரணமாக காவலர்கள் ஆறு பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் தொடர்பிலிருந்த மற்றவர்கள், குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
போத்தனூர் போலீஸ் நிலையத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலைய அலுவலகத்தை மூடும்படி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார். இதனால், போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும், போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து காவலர்களும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக வேறு போலீசார் போத்தனூரில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

esi-coimbatore

ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த நான்கு பேருக்கு கொரோனா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு தொற்று உள்ளதால், அவர் மூலம் ஆயுதப் படையில் வேறு யாருக்கெல்லாம் பரவியதோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.