கோவைக்கு வந்துவிட்டது குடிநீர் ஏ.டி.எம்! 1 லிட்டர் ரூ. 1

 

கோவைக்கு வந்துவிட்டது குடிநீர் ஏ.டி.எம்! 1 லிட்டர் ரூ. 1

தமிழகத்தில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாட்டர் பாட்டில்களில் குடிநீர் விநியோக்கிக்கப்படுவதை தடை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாட்டர் பாட்டில்களில் குடிநீர் விநியோக்கிக்கப்படுவதை தடை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி உள்ள பகுதிகளில் இந்த குடிநீர் ஏடிஎம்.,கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ஊட்டி நகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 10 இடங்களிலும், குன்னூர் நகராட்சியில் 4 இடங்களிலும், கூடலூர் நகராட்சியில் 6 இடங்களிலும், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலும், 11 பேரூராட்சிப் பகுதிகளிலும், சுற்றுலாத் துறை சார்பில் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய இடங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தல் 70 குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது கோவையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

 

இதுதொடர்பாக  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “”எளியோரின் தண்ணீர் தாகத்தை போக்கும் குடிநீர் ATM, வந்துவிட்டது கோவைக்கு”
கோடைக்காலம் துவங்கியதால் தண்ணீர் பருகுவது அவசியமெனும் நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் 1 ரூபாய்க்கு 1 லிட்டர் குடிநீர் ஏ.டி.எம்.கள் 130 பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன!” என குறிப்பிட்டுள்ளார்.