கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா : தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா : தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

tamilnadu

சட்ட விரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ராதா கிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

அதனையடுத்து, ஆட்சேபனை இல்லாத கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்றும் ஆட்சேபனை இருந்தால் அந்த நிலத்தை ஆக்கிரமித்த நபர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள 38 ஆயிரம் கோயில்களின் நிலங்கள், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். 

court

இதனைத் தொடர்ந்து, அந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் எழுந்தது. அதில் அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்குப் பட்டா என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.