கோவில் கட்டிய டேனியல் பாலாஜி: குவியும் பாராட்டுக்கள்!

 

கோவில் கட்டிய டேனியல் பாலாஜி: குவியும் பாராட்டுக்கள்!

நடிகர் டேனியல் பாலாஜி ஆவடி அருகில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி ஆவடி அருகில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜி ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து காக்க காக்க, காதல் கொண்டேன்,வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் என்று பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது தளபதி 63 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக செய்திகள் வெளியாகின. இவர் நடிப்பையும் தாண்டி சென்னை ஆவடியில் ஒரு அம்மன் கோவில் கட்டிவருகிறார்.

அக்கோவில் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் மார்ச் 13ம் தேதி கும்பாபிஷேகம் நடைப்பெற உள்ளதாகவும், அனைவரும் வருக என தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.  இவரின் இந்த செயலை பார்த்த பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.