கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் – எச்.ராஜா ட்வீட்

 

கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் – எச்.ராஜா ட்வீட்

கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சென்னை: கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதுமான ஊரடங்கை அறிவித்தார். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். அனைத்து விதமான மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டர் பதிவில் “தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார், இசை கலைஞர்கள், ஆகியோருக்கு மாதம் 10000 ரூபாய் வரும் 3 மாதங்களுக்கு அறநிலையத்துறை வழங்கிட வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.