கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!

 

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!

இனிமேல் கோவில்பட்டியை தவிர மற்ற ஊர்களில் “கோவில்பட்டி கடலைமிட்டாய்” என்று விற்க முடியாது.

ஒரு பொருளின் தனித்தன்மைக்கு, அதன் ஊர் காரணமாக இருந்தால் புவிசார் குறியீடு வழங்கப்படும். காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் பட்டியலில் இப்போது கோவில்பட்டி கடலை மிட்டாயும் சேர்ந்துள்ளது. இனிமேல் கோவில்பட்டியை தவிர மற்ற ஊர்களில் “கோவில்பட்டி கடலைமிட்டாய்” என்று விற்க முடியாது. அதுமட்டுமில்லாமல் கடலைமிட்டாயை மற்ற இடங்களில் தயார் செய்து சந்தை படுத்தவும் முடியாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமாம். 

kovilpatti

சில ஆண்டுகளுக்கு முன்னர், கடலைமிட்டாய் கோவில்பட்டியின் பூர்வீகம் என்று நிரூபிக்க பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு வந்தன. அதனையடுத்து கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்க விண்ணப்பத்தற்கான பரிசீலனை நடந்து வந்தது.  இந்நிலையில், தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை மாநில செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறையும், புவிசார் குறியீடு இதழும் வெளியிட்டுள்ளது.