கோவில்பட்டி அருகே விவசாய நிலங்களில் தீ! பயிரிடப்பட்ட மக்காச்சோளம் எரிந்து சேதம்

 

கோவில்பட்டி அருகே விவசாய நிலங்களில் தீ! பயிரிடப்பட்ட மக்காச்சோளம் எரிந்து சேதம்

கோவில்பட்டி அருகேயுள்ள காளாம்பட்டி கிராமத்தில்  இருந்து சுமார் 1கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலங்களில் தீவிபத்து ஏற்பட்டது. 

கோவில்பட்டி அருகேயுள்ள காளாம்பட்டி கிராமத்தில்  இருந்து சுமார் 1கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலங்களில் தீவிபத்து ஏற்பட்டது. 

நிலத்தில் அறுவடை செய்யப்படமால் இருந்த மக்காச்சோளம், அறுவடை செய்து வைத்திருந்த மக்கர்ச்சோளம் மற்றும் கால்நடை தீவன நாற்றுகள் தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். உடனே தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும், விவசாயிகளும் விவசாய நிலத்தில் ஏற்பட்ட தீயை கடும்போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.  இந்த தீவிபத்தினால்  காளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் 9 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச் சோளம் முற்றிலும் எரிந்து நாசமானது. இவர் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் பார்த்துவந்தார். 

fire

காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென அடுத்தடுத்த நிலங்களுக்கு பரவ ஆரம்பித்தது. இதனால் அருகில் இருந்த 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் மக்காச்சோள தட்டைகள் மற்றும் கால்நடை தீவன நாற்றுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்துக்குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீவிபத்தில் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.