கோவில்பட்டியில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் செயல்பட தொடங்கியுள்ளன!

கோவில்பட்டியில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும்  செயல்பட தொடங்கியுள்ளன!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்.  சாமானிய மக்கள் பிழைப்பு நடத்தும் பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்.  சாமானிய மக்கள் பிழைப்பு நடத்தும் பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை  இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 

tt

இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றபட்டு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், தீக்குச்சி தொழிற்சாலைகள் மருந்து முக்கிய குச்சிகளை பெட்டிக்குள் அடைக்கும் நிறுவனங்கள் போன்றவை நேற்றுமுதல் செயல்பட தொடங்கியுள்ளன. பணி நேரத்தில் தொழிலாளர்களை அழைத்து வரவும், பணி முடிந்து தொழிலாளர்கள் வீடுகளுக்கு அழைத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

tt

முன்னதாக கொரோனா தொற்று பாதிப்பில்லாத இடங்களில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.