கோவிலுக்கு உள்ளேயே கள்ள நோட்டு அச்சடிப்பு! பூசாரி உட்பட 5 பேர் கைது!

கோவிலுக்கு உள்ளேயே கள்ள நோட்டு அச்சடிப்பு! பூசாரி உட்பட 5 பேர் கைது!

குஜராத் மாநிலம் சூரத் கிரைம் பிராஞ்ச் போலீசார் சோட்வைத்யா என்கிற 19 வயது வாலிபனை எதேச்சையாக பிடித்து விசாரித்தபோது அவனிடம் 203 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. காம்ரெஜ் ஏரியருகே இருக்கும் கிராமத்தில் பிடிபட்ட சோட்வைத்யாவிடம் இருந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்று தெரிந்ததும் போலீசுக்கு அதிகம் வேலை வைக்காமல் அந்த கள்ள நோட்டு கும்பலைப் பற்றிய முழு விபரங்களையும் சொல்லிவிட்டான் அவன்.

அதைத் தொடர்ந்து கேடா மாவட்டத்தில் அம்பாவ் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் நாராயன் சுவாமி கோவிலுக்குள் நுழைந்தது போலீஸ்.அங்கே கோவிலின் பூசாரி ராதாராமன் பூசாரியைப் பிடித்தார்கள். அவரிடமிருந்து 50 லட்சம் மதிப்புள்ள 2500 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப் பட்டன.அவரை விசாரித்ததில் புதிதாக கட்டப்பட்டு வரும் அந்தக் கோவிலின் ஒரு பகுதியிலேயே கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.அங்கிருந்து கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்த பட்ட இயந்திரமும் மற்ற உபகரணங்கள் கைப்பற்றப் பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் பிரவின் சோப்ரா, கனு சோப்ரா,சூரத் காம்ரஜ் அனிலேஷ்வரைச் சேர்ந்த மோகன் மாதவ் ஆகிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.ஷியாம் தாம் கோவில் அருகே பிடிபட்ட அவர்களிடம் இருந்து மேலு 2310 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டன.அவற்றின் மதிப்பு 46 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.சூரத் கிரைபிராஞ் உதவிகமிஷ்னர் ஆர்.ஆர் சர்வையா தலைமையிலான போலீஸ் படை இவர்களைப் பிடித்தது.

புதிதாகக் கட்டப்படும் கோவிலுக்கு உள்ளேயே இப்படி கள்ள நோட்டடித்த விவகாரம் இப்பொது குஜராத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.