கோவிலுக்குள் புகுந்த முதலை… குங்குமத்தைக் கொட்டி வணங்கிய பக்தர்கள்…

கோவிலுக்குள் புகுந்த முதலை… குங்குமத்தைக் கொட்டி வணங்கிய பக்தர்கள்…

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குள் அல்லது கோவிலுக்குள்  ஒரு பிரமாண்டமான முதலை நுழைந்தால் பொதுவாக என்ன செய்வோம்… வனத்துறைக்கு தகவல் சொல்லி பாதுகாப்பாக அதை பிடித்து உரிய இடங்களில் சேர்ப்போம்.இதுதானே உலக வழக்கம்.ஆனால்,பிடிக்கக்கூடாதுன்னு பஞ்சாயத்து வாய்த்த பக்தர்களை கேள்விப் பட்டிருக்கீங்களா… அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் குஜராத்தில் நடந்திருக்கிறது!

crocodile

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் இருக்கிறது அந்த மாதா கோயில். படேல் சமூக மக்கள் மத்தியில் இந்தக் கோவில் பிரசித்தி பெற்றது. எப்போதும் போல் காலையில் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பயங்கர அதிர்ச்சி.கோவிலுக்குள் பெரிய முதலை ஒன்று சாவகாசமாக படுத்துக்கிடந்திருக்கிறது .
அங்கு வந்திருந்த பக்தர்களில் ஒருவர்,முதலை கடவுளின் அவதாரம் சொல்லவும்… அந்த முதலையின் மீது  குங்குமத்தைக் கொட்டி, ஆரத்தி எடுத்து வணங்கியிருக்கிறார்கள்.
இந்த தகவல் தெரிந்து அங்கு வனத்துறையினரிடம்,முதலையை பிடிக்க அனுமதிக்க முடியாது…அது கடவுள் அவதாரம் என்று மல்லுக்கு நின்றிருக்கிறார்கள்.அவர்களின் எதிர்ப்பையும் மீறி கோவிலுக்குள் நுழைந்து  முதலையைப் பிடித்து அருகிலுள்ள நீர்நிலையில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்.

crocodile

முதலையும் ஜாலியாக நீந்தி உள்ளே போய்விட்டது. ஆவரேஜ் கணக்குப் போட்டாலும் இந்த மாதிரி வருசத்துக்கு 35 முதலைகள் பிடிபடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.’எல்லாத்தையும் கடவுள்னு ஊருக்குள்ள விட்டா மனுச மக்க வாழ வேணாமா’ என்று சொல்லியிருக்கார்  வனத்துறை அதிகாரி ஒருவர்.அதானே !