கோவிலுக்குச் சென்ற கேப்பில் 40 சவரன் தங்கத்தை ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் !

 

கோவிலுக்குச் சென்ற கேப்பில் 40 சவரன் தங்கத்தை ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் !

பழனியிலிருந்து கிளம்பி பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த தம்பதியினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணா புரம் என்னும் பகுதியில் செல்வராஜ்- சுகுணா தேவி என்னும் தம்பதி வசித்து வருகின்றனர். சுகுணா தேவி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவரும், நேற்று காலை பழனி முருகன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். 

House

இவர்கள் வீட்டை விட்டுச் செல்வதை நோட்டம் வீட்டுக் கொண்டிருந்த கொள்ளையர்கள், அவர்கள் சென்றவுடன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதை  வீட்டின் அருகிலிருந்தோர் கூட யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின், செல்வராஜின் தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை உடனே மகனுக்குத் தகவல் சொல்லியுள்ளார். 

Theft

பழனியிலிருந்து கிளம்பி பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த தம்பதியினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பீரோவில் வைத்திருந்த பணத்தையும் நகையையும் கொள்ளையடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். பட்ட பகலிலே நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.