கோவிலில் வழிபட அனுமதி மறுப்பு! – குடும்பத்தோடு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

 

கோவிலில் வழிபட அனுமதி மறுப்பு! – குடும்பத்தோடு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே மாடசுவாமி கோவில் உள்ளது. ஒரு குடும்பத்தினர் கோவிலாக இருந்துவந்த இதை, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினரை மட்டும் கோவிலில் வழிபட அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே மாடசுவாமி கோவில் உள்ளது. ஒரு குடும்பத்தினர் கோவிலாக இருந்துவந்த இதை, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
இந்த நிலையில், அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த வள்ளியமாள் என்பவரது குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், “அழகியபாண்டியபுரம் அருகே உள்ள மாடசுவாமி கோவிலை எங்கள் குடும்பத்திடமிருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியது. ஆனால், தற்போது அந்த கோவில் வேறு ஒரு குடும்பத்தின் தனிநபர் கையில் சிக்கியுள்ளது. நாங்கள் பரம்பரை பரம்பரையாக நடத்திவந்த பூஜைகளைத் தொடர எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியிலிருந்தே பூஜை செய்ய வேண்டிய நிலை எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்டது. தற்போது, கோவிலுக்குள் எங்கள் குடும்பத்தினரை அனுமதிக்க மறுக்கின்றனர்.

kanyakumari-family-protest-01

இந்து சமய அறநிலையத் துறை வசம் உள்ள கோவிலில் யார் வேண்டுமானாலும் நுழையலாம்… ஆனால் கோவிலை கட்டி, இத்தனை ஆண்டுகள் பராமரித்துவந்த எங்கள் குடும்பத்துக்கு மட்டும் அனுமதி இல்லை என்பதை ஏற்க முடியாது. எங்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கோவிலுக்குள் சென்று வழிபட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கன்னியாகுமரியில் ஒரு குடும்பத்தை மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.