கோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா? அறிவியல் விளக்கத்தையும் தெரிஞ்சுக்கோங்க!

 

கோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா? அறிவியல் விளக்கத்தையும் தெரிஞ்சுக்கோங்க!

ஏதோ கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி, நம்முடைய கஷ்டங்களைப் புலம்பிவிட்டு வருகிறோம் என்று கோயிலுக்குச் செல்லாமல், கோயிலின் இறைவழிப்பாட்டின் பின் உள்ள அறிவியல் அற்புதங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள். கோயிலின் இறை வழிப்பாட்டில் ஒவ்வொரு செயலுக்கும் அறிவியல் ரீதியிலான காரணங்கள் உள்ளன. இதற்கு மிக சிறந்த உதாரணம் நாம் கோவிலில் வழிபாட்டின் போது அடிக்கும் மணி.

ஏதோ கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி, நம்முடைய கஷ்டங்களைப் புலம்பிவிட்டு வருகிறோம் என்று கோயிலுக்குச் செல்லாமல், கோயிலின் இறைவழிப்பாட்டின் பின் உள்ள அறிவியல் அற்புதங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள். கோயிலின் இறை வழிப்பாட்டில் ஒவ்வொரு செயலுக்கும் அறிவியல் ரீதியிலான காரணங்கள் உள்ளன. இதற்கு மிக சிறந்த உதாரணம் நாம் கோவிலில் வழிபாட்டின் போது அடிக்கும் மணி. கோவில் மணிக்கு பின் என்ன அறிவியல் ஒளிந்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? 

temple bell

கோவில் மணிகள் சாதாரண உலோகத்தினால் செய்யப்படுவதல்ல. கேட்மியம் (தகர உலோக வகை), ஜிங்க், ஈயம், தாமிரம், நிக்கல், க்ரோமியும், மற்றும் மாங்கனீசு போன்ற பல உலோகத்தின் கலவையால் தான் கோயிலில் ஒலி எழுப்பும் மணி செய்யப்படுவது. கோவில் மணியை உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகத்தின் விகிதத்திற்கு பின்னணியிலும் அறிவியல் அற்புதங்கள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு முறை மணி அடிக்கப்படும் போதும், ஒவ்வொரு உலோகத்தில் இருந்து தனித்துவமான ஒலி ஏற்படும் வகையில் ஒவ்வொரு உலோகமும் கலக்கப்பட்டிருக்கும். இந்த தனித்துவமான ஒலிகளால், நம் இடது மற்றும் வலது மூளையில் ஒற்றுமை உண்டாக்கும். அதனால் மணி ஒலிக்க தொடங்கிய அடுத்த நொடியிலேயே கூர்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடிய சத்தம் எழும்.

temple

இந்த சத்தம் 7 நொடிகள் வரை நீடிக்கும். மணியோசையில் இருந்து வரும் எதிரொலி, நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தொடும். அதனால், மூளையின் வாங்குந்தன்மையும், உணர்வு திறனும் தீவிரமடையும். அதனால் தான் கருவறைக்கு செல்லும் முன் மணியை அடித்துவிட்டு செல்கிறோம். அடுத்த முறை கோயிலுக்குச் செல்லும் போது மணியோசையைக் கவனித்து இறையின் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்!