கோவிலில் இருதரப்பினரிடையே வெடித்த மோதல்..! கைகலப்பாக மாறியதால் பரபரப்பு

 

கோவிலில் இருதரப்பினரிடையே வெடித்த மோதல்..! கைகலப்பாக மாறியதால் பரபரப்பு

காஞ்சிபுரத்தில் வட கலை மற்றும் தென் கலை பிரிவினர் நடுவே இன்று மீண்டும் மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரத்தில் வட கலை மற்றும் தென் கலை பிரிவினர் நடுவே இன்று மீண்டும் மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. உற்சவம் நடைபெறுவதையொட்டி தினமும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் சுவாமி அலங்காரம் மற்றும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதனையொட்டி சுவாமி எழுந்தரும் வேளைகளில், தென்கலை பிரிவினர் திருமங்கையாழ்வார் பாசுரம் பாட முயற்சி செய்தனர். ஆனால், வடகலை பிரிவினர் அவர்கள் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் பதற்றம் ஏற்பட்டது.

இரு தரப்பிலிமிருந்து ஒருவர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் கோவிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் குவிந்தனர். வட கலை வைணவர்கள், திருமாலையும், லட்சுமி தேவியையும் சரிசமமாக பூஜைக்கு உரியவர்களாக கருதுபவர்கள்,தென் கலை வைணவர்களும், லட்சுமி தேவியை வணங்குவார்கள் இருந்தாலும் திருமாலை மட்டுமே மூல தெய்வமாக கருத வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்.