கோவிந்தா, வா கோவிந்தா ஒரு டீ சாப்பிடலாம் – அமித் ஷா அழைப்பு

 

கோவிந்தா, வா கோவிந்தா ஒரு டீ சாப்பிடலாம் – அமித் ஷா அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பிற மாநில முக்கிய கட்சிகள் தனித்தனியாக ஒரு அணியாகவும் களம் கண்டன

நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும், பிற மாநில முக்கிய கட்சிகள் தனித்தனியாக ஒரு அணியாகவும் களம் கண்டன. தேர்தல் நடக்கும்போதே, பாஜக மற்றும் அதன் கூட்டணியினர் அல்லாத கட்சிகளை ஒரே அணியில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஒரு பக்கம் முயல, அந்த கூட்டணியில் இருப்பதுபோலும் இருந்துகொண்டு இல்லாததுபோலும் இருந்த மம்தா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் தனித்தனியாக தங்கள் அணியை  பலமாக்க முயற்சித்தனர்.

chandrababu

இதில் சந்திரபாபு நாயுடுதான் ஆரம்பித்திலிருந்தே பாஜகவுக்கு மாற்றாக ஒரு அணியை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொண்டார். அடைந்தால் பிரதமர் பதவி என 34 தொகுதிகளில் போட்டியிடும் மாயாவதி ஒரு பக்கம் முறுக்கிக்கொண்டு இருக்கிறார். விட்டால்  மாநிலத்துக்கு ஒரு பிரதமர் வேட்பாளர் வருவார் போல. அதிருக்கட்டும் ஒரு பக்கம். வருகிற மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வர இருப்பதால், காங்கிரஸ் ஒரு பக்கம் தன் கூட்டணி கட்சியினருக்கும், பிற எதிர்கட்சிகளுக்கும் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

amit

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தந்த தெம்பு ஒருபக்கம் இருந்தாலும், அமித் ஷாவும் தன் பங்கிற்கு கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது மே 21ஆம் தேதியை முடிவு செய்திருக்கும் அமித் ஷா “வா கோவிந்தா, ஒரு டீ சாப்ட்டுகிட்டே பேசலாம்” என கூட்டணி கட்சியினருக்கு வெற்றிலை பாக்கு வைத்திருக்கிறார். பார்ப்போம், எந்த வீட்டு விஷேஷத்திற்கு ஆட்கள் அதிகம் வருகிறார்கள் என்று.