கோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க நிதி வேண்டுமா? முதல்ல வெளிநாட்டுக்கு போறதை நிறுத்துங்க…. மோடிக்கு சோனியா காந்தி யோசனை…

 

கோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க நிதி வேண்டுமா? முதல்ல வெளிநாட்டுக்கு போறதை நிறுத்துங்க…. மோடிக்கு சோனியா காந்தி யோசனை…

கோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க தேவையான நிதி கிடைக்க, பிரதமர் மோடி முதல் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில ஆலோசனைகளை பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தொற்று நோயான கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க தேவையான நிதி கிடைக்க சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த நேரத்தில் சிக்கன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

செலவினத்தை குறைக்க வேண்டும்

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் மத்திய துறை திட்டங்களை தவிர்த்து மற்ற  பட்ஜெட் செலவினங்களை 30 சதவீதம் குறைக்க வேண்டும். ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பிரதமர் மோடி, குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி

செயல்திறன், வெளிப்படைதன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக பி.எம்.கேர்ஸ் நிதியின் திரட்டப்பட்ட அனைத்து பணத்தையும் பிரதமர் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் புதிய நாடாளுமன்ற கட்டும் திட்டத்தை ஒராண்டுக்கு தள்ளிவைத்தால் ரூ.25 ஆயிரம் கோடி கிடைக்கும் என தெரிவித்து இருந்தார்.