கோவிட்-19 சோதனை கருவிகளை அரசுக்கு வழங்குவதில் சிலர் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.. பிரதமர் தலையிட ராகுல்காந்தி கோரிக்கை….

 

கோவிட்-19 சோதனை கருவிகளை அரசுக்கு வழங்குவதில் சிலர் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.. பிரதமர் தலையிட ராகுல்காந்தி கோரிக்கை….

கோவிட்-19 சோதனை கருவிகளை அரசுக்கு விற்பனை செய்வதில் சிலர் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். அவர்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் உள்நாட்டில் போதுமான அளவில் இல்லாததால் சீனா உள்பட பல நாடுகளில் மத்திய அரசு வாங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில், கோவிட்-19 விரைவான சோதனை கருவிகளை சிலர் 150 சதவீத லாபத்தில் அரசுக்கு விற்பனை செய்வதாக ஊடகங்களில் வெளியான செய்தியை குறிப்பிட்டு, அதற்கான பொறுப்பை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. 

ரேபிட் சோதனை கருவி

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், கோவிட்-19 பேரழிவுக்கு எதிராக நாடே போராடி கொண்டு இருக்கும் வேளையிலும், சில மக்கள் இன்னும் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். அத்தகைய ஊழல் மனநிலையை ஒருவர் வெறுக்கிறார், வெட்கப்படுகிறார். இந்த கொள்ளை லாபக்காரர்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

ரன்தீப் சுர்ஜேவாலா

நாடு ஒருபோதும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்காது என இந்தியில் பதிவு செய்து இருந்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், அந்த மக்கள் ஒரு பரிசோதனை கருவியை ரூ.225க்கு இறக்குமதி செய்து அரசுக்கு ரூ.600க்கு விற்பனை செய்கின்றனர். இது வெட்கக்கேடான மற்றும் மனிதாபிமானமற்றது என தெரிவித்தார்.