கோவாவை தொடர்ந்து மணிப்பூரும் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக ஆனது….

 

கோவாவை தொடர்ந்து மணிப்பூரும் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக ஆனது….

மணிப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த 2வது நபரும் குணம் அடைந்து வீடு திரும்பியதால், கோவாவை தொடர்ந்து மணிப்பூரும் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக ஆனது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அருணாசல பிரதேசம், கோவா, மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி, திரிப்புரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. இந்த மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கில் உள்ளன.

நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர்

கோவாவில் கொரோனா வைரஸால் மொத்தமே 7 பேர்தான் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் குணம் அடைந்து வீடு திரும்பினர். மேலும் அங்கு வேறு யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது மாநிலத்தை கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கோவா அரசு அறிவித்தது.

கொரோனா வைரஸ்

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் இல்லாத 2வது மாநிலமாக மணிப்பூர் ஆனது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் மொத்தமே இரண்டு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். இரண்டு பேருமே குணம் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். அம்மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கூடுதல் இயக்குனர் இது குறித்து கூறுகையில், மாநிலத்தின் 2வது நோயாளியிடம் இரண்டு முறை பரிசோதனை செய்தததில் நெகடிவ் என ரிசல்ட் கிடைத்தது மற்றும் அவரது நீரழிவு நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது இதனையடுத்து இம்பாலாவில்  ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பட்டார் என தெரிவித்தார். இதனையடுத்து கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மணிப்பூர் ஆனது.