கோழிக்கறி, முட்டை மூலம் கொரோனா பரவுகிறதா?: அரசு மீண்டும் விளக்கம்!

 

கோழிக்கறி, முட்டை மூலம் கொரோனா பரவுகிறதா?: அரசு மீண்டும் விளக்கம்!

கொரோனா வைரஸ் பரவுவதை விட அதனைப்பற்றிய வதந்தி அதிக அளவில் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை விட அதனைப்பற்றிய வதந்தி அதிக அளவில் பரவி வருகிறது. அப்படி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தும் அவை தொடர்ந்த  வண்ணமே இருக்கின்றன. குறிப்பாக கோழிக்கறி மற்றும் முட்டை சாப்பிடுவதன் மூலம் கொரோனா பரவுவதாக பரவிய வதந்தியால், கோழிக்கறி விற்பனை நலிவடைந்தது. இந்நிலையில் கொரோனா கோழிக்கறி சாப்பிடுவதால் பரவாது என அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. 

ttn

இது குறித்து தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில்,  முட்டை, கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுகிறது என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. இது போல தவறான தகவல்களால்நாம், கோழிக்கறியை சாப்பிடுவது தவிர்ப்பதன் மூலம் உடலில் புரதத் தேவையை இழக்கிறோம். அதே போல கோழிக்கறி விற்பனை செய்யும் தொழிலும் நலிவடைகிறது. புரதம் அதிகம் இருக்கும் உணவான கோழிக்கறி மற்றும் முட்டை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதனால் மக்கள் எந்த வித பயமும் இல்லாமல் கோழிக்கறி மற்றும் முட்டை சாப்பிடலாம். அதன் மூலம் கொரோனா பரவாது என்று தெரிவித்துள்ளது.