கோலிவுட் ஹீரோ மகனுக்கு வாழ்த்துக் கூறிய விராட் கோலி 

 

கோலிவுட் ஹீரோ மகனுக்கு வாழ்த்துக் கூறிய விராட் கோலி 

நடிகர் விக்ரம் பிரபு மகனுக்கு, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். 

சென்னை: நடிகர் விக்ரம் பிரபு மகனுக்கு, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். 

நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டு இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  அவருக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்துக் கூறி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

அதில், ‘என்னுடைய மகனின் பிறந்தநாளிற்காக நீங்கள் உங்களுடைய நேரத்தைச் செலவழித்து வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி. 

என் மகன் இந்த வீடியோவை பார்த்து உற்சாகம் அடைந்தான். அதேபோல மேற்கு இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றியையும் கொண்டாடினான்’ என்று பதிவிட்டுள்ளார்.